ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கக் கூடாது – வைகோ

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கக் கூடாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

சென்னை : மே-17

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நச்சாலைக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அனுமதி மறுத்ததை எதிர்த்து, ஆலை நிர்வாகம் மேல் முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. சென்னை புரசைவாக்கத்தில் உள்ள மேல்முறையீட்டுத் தீர்ப்பாய நீதிபதி சுதந்திரம் மற்றும் நிபுணர் ஜெயகுமார் எத்திராஜ் அமர்வு முன்பு கடந்த 4 ஆம் தேதி இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் ஆலை நிர்வாகத்தின் வழக்கறிஞர் மோகன் பராசரன் ஆகியோரின் வாதங்களை கேட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை மே 17 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். இதையடுத்து, இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தபோது, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் ஆஜரானார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தினார்.

Related Posts