ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி போராட்டம்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி,  81-வது நாளாக அப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தூத்துக்குடி : மே-04

தூத்துக்குடியில் நாசகார ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும், சிப்காட் வளாகத்தில் அமைய உள்ள 2-வது ஆலைக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்பதனை வலியுறுத்தியும், அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அ.குமரெட்டியாபுரத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் இன்று 81-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பண்டாரம்பட்டி, சில்வர்புரம், சங்கராப்பேரி உள்ளிட்ட 16 கிராமங்களில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில், ஏராளமான பெண்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தின்போது,  ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

இதேபோல், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, தூத்துக்குடி பனிமய மாதா கோயில் வளாகத்தில், 20 நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

Related Posts