ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கைகள்: வேதாந்தா நிறுவனம் தகவல்

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் மூலம், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. இந்நிலையில் வேதாந்தா நிறுவனம் வெளியிட்ட 2017-18-ம் ஆண்டுக்கான வருடாந்திர அறிக்கையில், கடந்த மார்ச் மாதம் ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகளுக்கான செப்பு உலோகத்தை உருக்கும் பணி நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ஆலை மூடப்பட்டதை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டு, ஆலையை திறக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆலை மீண்டும் திறக்கப்பட்டால் எந்த சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படாது என்பதை நிரூபிப்போம் என்று தெரிவித்துள்ள வேதாந்தா நிறுவனம், அங்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டும் இல்லை, அனல் மின்நிலையம், சாயத் தொழிற்சாலைகள் மற்றும் சிறிய-பெரிய அளவிலான 60-க்கும் மேற்பட்ட தொழிற் சாலைகள் உள்ளன என்று பட்டியலிட்டுள்ளது. இதுதொடர்பான பேச்சு வார்த்தைக்கு திறந்த மனதுடன் இருக்கிறோம் என்றும் அந்த அறிக்கையில் வேதாந்தா நிறுவனம் கூறியுள்ளது.

 

Related Posts