ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி மாவட்டத்தில் வைகோ இன்று முதல் வாகன பிரச்சாரம்

 

 

ஸ்டெர்லைட் நச்சாலையை நிரந்தரமாக மூடக்கோரி, தூத்துக்குடி மாவட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று முதல் வாகன பிரச்சாரப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

ஏப்ரல்-17

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.  இந்நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் நச்சாலையை நிரந்தரமாக மூடக்கோரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இன்று முதல் வாகனப் பிரச்சாரப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

அதன்படி, கோவில்பட்டி, எட்டயபுரம்புதூர், நாகலாபுரம், விளாத்திகுளம், சூரங்குடி, வைப்பார், குளத்தூர் ஆகிய பகுதிகளில், இன்று மாலை 4 மணிக்கு, வைகோ வாகனப் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்.

நாளை,  கரிசல்குளம், காமநாயக்கன்பட்டி, பசுவந்தனை, ஒட்டப்பிடாரம், புதியம்புத்தூர், குறுக்குச் சாலை ஆகிய இடங்களில் வைகோ வாகனப் பிரச்சாரம் செய்யவுள்ளார்.

இதேபோல், வரும் 21 ஆம் தேதி, செய்துங்கநல்லூர், ஆழ்வார்திருநகரி, நாசரேத், பேய்குளம், சாத்தான்குளம், மெஞ்ஞானபுரம், பரமன்குறிச்சி, உடன்குடி ஆகிய பகுதிகளில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வாகனப் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்.

வரும் 22 ஆம் தேதி, திருவைகுண்டம், ஏரல், வடக்கு ஆத்தூர், தெற்கு ஆத்தூர், ஆறுமுகநேரி, காயல்பட்டணம், திருச்செந்தூர், ஆலந்தழை, குலசேகரபட்டணம், மணப்பாடு, பெரியதாழை ஆகிய இடங்களில் வைகோ வாகனப் பிரச்சாரம் செய்யவுள்ளார்.

இதையடுத்து, வரும் 28 ஆம் தேதி மாலை 6 மணிக்கு தூத்துக்குடி வி.வி.டீ. சிக்னல் அருகில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உரையாற்றவுள்ளார்.

Related Posts