ஸ்டெர்லைட் ஆலையை மூட கொள்கை முடிவு எடுக்க முடியாது என முதலமைச்சர் கூறியதன் மூலம் பூனைக்குட்டி வெளியே வந்திருப்பதாக : மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையை மூட கொள்கை முடிவு எடுக்க முடியாது என முதலமைச்சர் கூறியதன் மூலம் பூனைக்குட்டி வெளியே வந்திருப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

கொச்சி செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக யாரும் போராடக் கூடாது என அச்சுறுத்துவதற்காகவே மே22ந்தேதி துப்பாக்கி சூடு நடத்தி 13 பேர் கோரமாக கொல்லப்பட்டனர் என தெரிவித்தார். மக்கள் உள்ளம் எரிமலையாய் வெடித்தற்கு அஞ்சித்தான் ஆலையை மூடுவதாக நாடகமாடினார்கள் என்று வைகோ தெரிவித்தார்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக உயர்நீதிமன்றக் கிளையில் தான் தொடுத்த வழக்கில் தன் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் அஜ்மல்கான், என்னென்ன காரணத்திற்காக ஆலை மூடப்பட்டது என்பதை ஒரு கொள்கை முடிவாக எடுத்து அதை அமைச்சரவை மற்றும் சட்டப்பேரவையை கூட்டித் தீர்மானம் நிறைவேற்றினால் தீர்ப்பாயத்திற்கு போக முடியாது எனவும் உய்ர்நீதிமன்றத்திற்கோ, உச்சநீதிமன்றத்திற்கோதான் செல்ல வேண்டும் என்று கூறியதை நினைவு கூர்ந்த வைகோ,ஆலையைத் திறப்பதற்கான வழிமுறைகளை ஏற்படுத்திவிட்டு வெளி உலகில் அதிமுக அரசு கபடநாடகம் ஆடியதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய வைகோ, ஸ்டெர்லைட் விவகாரத்தில், நிர்வாகம், தமிழக அரசு இருவருமே குற்றவாளிகள் என்வும்,  ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் இருந்தே ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு பக்கபலமாக அதிமுக அரசு இருந்து வருவதாகவும் குறிப்பிட்டார் ஸ்டெர்லைட் ஆலையை மூட கொள்கை முடிவு எடுக்க முடியாது என முதலமைச்சர் கூறியதன் மூலம் பூனைக்குட்டி வெளியே வந்திருப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்

Related Posts