ஸ்டெர்லைட் ஆலையை மூட தன்னுடைய முழு பலத்தையும் திரட்டி மதிமுக போராடும் 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தன்னுடைய முழு பலத்தையும் திரட்டி மதிமுக போராடும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னை : மே-22

சென்னையில் திமுக தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஸ்டெர்லைட் ஆலையை மூட தன்னுடைய முழு பலத்தையும் திரட்டி மதிமுக போராடும் என்று கூறினார். பல்வேறு தொற்று நோய்களை உருவாக்க கூடிய ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என 22 ஆண்டுகளாக மக்கள் மன்றத்திலும், நீதி மன்றத்திலும், நாங்கள் போராடி வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக சென்னை விமான நிலையத்தில் இன்று காலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தென்மாநிலங்கள் மட்டுமின்றி, அடுத்த நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக வெற்றிபெற முடியாது என்று கூறினார். கர்நாடகத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் காவிரி பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காது என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

Related Posts