ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கு தமிழக அரசு உடந்தையாக உள்ளது

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கு தமிழக அரசு உடந்தையாக உள்ளது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை : மே-02

சென்னையை அடுத்த புழல் முகாமில், மே தினவிழா மற்றும் மதிமுகவின்  25ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. தென்சென்னை மதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் டி.சி. ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், அண்ணா ஆட்சி காலத்தில், மே 1ஆம் தேதி விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது எனவும், கலைஞர் ஆட்சியில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.

பிரதமர் மோடி நாசகார திட்டத்தை தமிழகத்தில் திணிப்பதாகவும், அதற்கு தமிழக அரசு உடந்தையாக இருப்பதாகவும் வைகோ குற்றம்சாட்டினார்.

இனிமேல் தொண்டர்கள் யாரும் தீக்குளிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட வைகோ, காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காது என உறுதிபட தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, திருவள்ளுர் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Posts