ஸ்டெர்லைட் ஆலை – உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல்

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளதால், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

தூத்துக்குடி : மே-31

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22ஆம் தேதி நடைபெற்ற பேரணி மற்றும் முற்றுகைப் போராட்டத்தின் போது, நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை  நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு அரசாணை பிறப்பித்ததையடுத்து, ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. இதை எதிர்த்து, ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா குழுமம், உச்சநீதிமன்றத்தை நாடலாம் எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து, உச்சநீதிமன்றத்தில், தமிழ்நாடு அரசு கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ளது. அதில், ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அரசாணையை எதிர்த்து, வேதாந்தா குழுமம் உச்சநீதிமன்றத்தை அணுகினால் தங்களின் கருத்தையும் கேட்க வேண்டும் என்றும், மாநில அரசின் கருத்துக்களை கேட்காமல் எந்த முடிவையும் மேற்கொள்ள கூடாது என்றும் தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.

Related Posts