ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படும் என்ற பேச்சுக்கு இடமே இல்லை

ஸ்டெர்லைட் ஆலை. திறக்கப்படும் என்ற பேச்சுக்கு இடமே இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

                சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், சாதி ரீதியாக பேசிய கருணாஸ் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர் எனவும், அவரது பேச்சுக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் இதுவரை கண்டனம் தெரிவிக்காதது ஏன் என கேள்வி எழுப்பினார். ஊழல் குறித்து பேச திமுக, காங்கிரசுக்கு தகுதி இல்லை என்ற அமைச்சர்,  ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் தடையாக இருக்கும் காங்கிரஸ் கட்சியை ஸ்டாலின் கண்டிக்காதது ஏன் என அவர் வினவினார். ஸ்டெர்லைட் ஆலை. திறக்கப்படும் என்ற பேச்சுக்கு இடமே இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்தார்.

Related Posts