ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி மறுப்பு

 

 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்குவதற்கு  தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி மறுத்துள்ளது. 

ஏப்ரல்-10 

தூத்துக்குடியில் உள்ள நாசகார  ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரிகடந்த 60 நாட்களாக ஆலையை சுற்றியுள்ள கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆலைக்கு, தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வழங்கிய உரிமம் சமீபத்தில் காலாவதி ஆன நிலையில், ஆலையில் பராமரிப்பு பணிகள் மட்டுமே நடந்து வந்தன. ஆலையை தொடர்ந்து இயங்க அனுமதிக்ககோரி அந்நிறுவனம் சார்பில் விண்ணப்பம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஸ்டெர்லைட் நிறுவனத்தின் விண்ணப்பத்தை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் நிபந்தனைகளை ஸ்டெர்லைட் குழுமம் சரிவர நிறைவேற்றாததால், உரிமம் நீட்டிப்புக் கோரிய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக  விளக்கமளித்துள்ளார்.

தூத்துக்குடியில் நாசகார ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்க தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளதற்கு  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வரவேற்பு தெரிவித்துள்ளார்.

Related Posts