ஸ்டெர்லைட் ஆலை வாகனம் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல்

 

 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையில் பணிபுரியும் ஊழியர்கள் சென்ற வாகனத்தின் மீது போராட்டக்காரர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி, ஏப்ரல்-12

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி இன்று 60வது நாளாக அ.குமரெட்டியாபுரம் கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தொடர்ந்து 8 கிராம மக்கள் ஆலைக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஆலை தொடர்ந்து இயக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, அதில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் ஆலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதி கோரி, ஆட்சியரிடம் மனு அளிப்பதற்காக ஆலையில் பணிபுரியும் ஊழியர்கள் 3 பேருந்துகள், 1 வேனில் சென்றனர். மடத்தூர் விலக்கு அருகில் வாகனங்கள் சென்றபோது, ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் பேருந்துகளின்மீது கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதில், 2 பேருந்துகளின் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதையடுத்து, காவல்துறையினர் போராட்டக்காரர்களை விரட்டி அடித்து, ஊழியர்களைப் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்.

Related Posts