ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு வழங்கப்பட்ட நிலம் ஒதுக்கீடு ரத்து

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு 342 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதை, சிப்காட் நிர்வாகம் ரத்து செய்துள்ளது.

தூத்துக்குடி : மே-29

தூத்துக்குடியில் சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில், ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்காக 342.22 ஏக்கர் நிலம் குத்தகை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்த நில ஒதுக்கீட்டை சிப்காட் நிர்வாகம் ரத்து செய்துள்ளது. ஏற்கெனவே இயங்கும் ஆலையால் ஏற்படும் மாசுபாடுகளையும், தங்கள் உடல்நலம் பாதிக்கப்படுவதையும்  சுட்டிக்காட்டி சம்மந்தப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடத்தியதை சிப்காட் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. பொதுமக்களின் நலன்கருதி தாமிர உருக்காலையை விரிவுபடுத்துவதற்காக செய்யப்பட்ட நில ஒதுக்கீட்டை ரத்து செய்வதாகவும் வேதாந்தா நிறுவனத்திற்கு சிப்காட் தெரிவித்துள்ளது. நில ஒதுக்கீட்டிற்காக வேதாந்தா நிறுவனத்திடமிருந்து வசூலிக்கப்பட்ட பணம் சிப்காட் விதிமுறைகளின்படி, திருப்பிஅளிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Related Posts