ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழர் ஒருவரை ஆய்வு குழுத் தலைவராக நியமிக்க வேண்டும் – தொல்.திருமாவளவன்

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழர் ஒருவரை ஆய்வு குழுத் தலைவராக நியமிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

               தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கேரள வெள்ள நிவாரண நிதிக்கு விடுதலைசிறுத்தை கட்சி சார்பில் 15 லட்சம் ரூபாய்க்கான காசோலை, முதல்வர் பிரனாயி விஜயனிடம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

              ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழர் அல்லாத ஒருவரை நீதிபதியாக நியமிக்க வேண்டும் என்ற ஆலை நிர்வாகத்தின் விருப்பப்படி தற்போது தமிழர் அல்லாத ஒருவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாக கூறினார். இதன் மூலம் பசுமைத் தீர்ப்பாயமும் ஸ்டெர்லைட் ஆலைக்கு துணைப்போகின்றதோ எண்ணத்தையும், மத்திய, அதற்கேதுவான சூழலை மத்திய, மாநில அரசுகள் உருவாக்கி கொடுக்கின்றனவோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். ஸ்டெர்லைட் ஆய்வுகுழுவுக்கு தமிழர் ஒருவரை  நீதிபதியாக  நியமிக்க  பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்ய வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தினார்.

Related Posts