ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

            சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வியனரசு, ஸ்டெர்லைட் ஆலையை அமைப்பதற்கு முன் மக்களிடம் கருத்து கேட்கவில்லை எனவும், விதிமுறைகளை மீறி கடல் எல்லையில் இருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தாமிரபரணி ஆற்றில் இருந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு தண்ணீர் எடுப்பதால் விவசாயம் பாதிக்கப்படுவதாகவும், சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் நஞ்சாகி உள்ளதாகவும் அவர் கூறினார்.  மேலும், ஸ்டெர்லைட் ஆலையால், காச நோய், புற்றுநோய் கருச்சிதைவு ஏற்படுவதாகவும் கூறிய அவர், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கூடாது எனவும், இது தொடர்பாக அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

Related Posts