ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் குறித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆய்வு செய்வதற்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் குறித்த ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ஜே. வசீ்ப்தர் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை அமைத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. மேலும் ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து மூடப்படுமா அல்லது இயக்கப்படுமா என்பது குறித்தும் இந்த குழு முடிவெடுக்கும் என்றும் அறிவித்தது. ஆனால் ஸ்டெர்லைட் வழக்கை விசாரிக்க விருப்பமில்லை என கூறி நீதிபதி வசிஃப்தர் விலகியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதி ஆய்வு செய்வதற்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அதில் இது போன்ற விசாரணை ஆணையம் அமைக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு அதிகாரமில்லை என்றும், முழுமையான ஆய்வுக்குப் பின்னரே ஆலையை மூடினோம் என்றும் நிர்வாக பணிகளுக்கு அனுமதி அளித்தால் ஆலையை செயல்படுத்த முற்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஸ்டெர்லைட் ஆலை வழக்கு விசாரணையில் இன்று மாலைக்குள் நீதிபதி நியமிக்கப்படுவார் என தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

Related Posts