ஸ்டெர்லைட்  துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க முடியாது

ஸ்டெர்லைட்  துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.  இது  தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை  எதிர்த்து உச்சநீதிமன்றத்தில்  தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், இது சட்டம், ஒழுங்கு பிரச்சினையே தவிர, போராட்டத்தின் பின்னணியில் மாவோயிஸ்ட்டுகள் இல்லை எனவும் போராட்டக்காரர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருவதாக கூறப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம்,  ஸ்டெர்லைட் விவகாரத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக  சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என  மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து.

 

 

Related Posts