ஸ்டெர்லைட் வழக்கில் தன்னையும் மனுதாரராக சேர்க்கக் கோரி டெல்லி பசுமை தீர்ப்பாயத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடுமையாக வாதிட்டார்.

ஸ்டெர்லைட் வழக்கில் தன்னையும் மனுதாரராக சேர்க்கக் கோரி டெல்லி பசுமை தீர்ப்பாயத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடுமையாக வாதிட்டார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூடியதை எதிர்த்து, ஸ்டெர்லைட் நிர்வாகம்,  டெல்லி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின்  தலைமை அமர்வில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த பசுமைத் தீர்ப்பாயம்,ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து ஆய்வு செய்ய, மேகாலயா மாநிலத்தின் முன்னாள் தலைமை நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. இந்த குழுவினர், தூத்துக்குடியில் ஆய்வு செய்த பின்பு, சென்னையில் நான்கு முறை கருத்து ஆய்வுக் கூட்டங்கள் நடத்தினர். அக்குழு,  ‘ஸ்டெர்லைட் ஆலையை மூடியது இயற்கை நீதிக்கு எதிரானது’ என, 196பக்கங்கள் கொண்ட அறிக்கையை பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் தாக்கல் செய்தது. இந்நிலையில் இந்த வழக்கு தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. இதில் பங்கேற்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தன்னையும் இந்த வழக்கில் ஒரு தரப்பாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என கோரினார். ஆனால் தீர்ப்பாய தலைமை நீதிபதி கோயல் எந்த முடிவையும் அறிவிக்காமல் விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்தி வைத்தார். இதன்படி ஸ்டெர்லைட் வழக்கு பசுமைத் தீர்ப்பாயத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இதில் பங்கேற்ற வைகோ. இந்த வழக்கில் தன்னையும் மனுதாரராக சேர்க்கக் கோரி கடுமையாக வாதிட்டார். மேலும் தன்னை வாதம் செய்யவிடாமல் தீர்ப்பாயம் அவமதித்ததாக நீதிபதி கோயலிடம் வைகோ புகார் தெரிவித்தார். தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது

Related Posts