ஸ்டெர்லைட் விவகாரத்தில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றிய எடப்பாடி பழனிச்சாமி அரசு உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்: முகிலன்

ஸ்டெர்லைட் விவகாரத்தில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றிய எடப்பாடி பழனிச்சாமி அரசு உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு சுற்று சூழல் இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் வலியுறுத்தியுள்ளார்.

 சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் மக்கள்  தீவைப்பு சம்பவத்தில் ஈடுபட்டதால் தான் துப்பாக்கி சூடு நடத்தியதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால் துப்பாக்கி சூட்டிற்கு பிறகே  தீ வைப்பு சம்பவம்  அரங்கேற்றப்பட்டதாகவும் தெரிவித்தார். துப்பாக்கிச் சூடு சம்பவத்தை பொறுத்தவரை ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகமும் அரசும் சேர்ந்து செய்த கூட்டுச் சதி என்று அவர் குற்றம்சாட்டினார். இந்த விவகாரத்தில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றிய தமிழக அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

Related Posts