ஸ்டேட்பேங்க் இந்தியா வங்கியை முற்றுகை அனைத்து கட்சியினர் அறிவித்துள்ளனர்.

பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான கட் ஆஃப் மதிப்பெண்  குறைவாக கணக்கிடப்பட்டு இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 26ஆம் தேதி கோவையில் உள்ள ஸ்டேட்பேங்க் இந்தியா வங்கியை முற்றுகையிட உள்ளதாக அனைத்து கட்சியினர் அறிவித்துள்ளனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன், பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை யாரும் ஏற்கவில்லை என்றும்,  பாரத ஸ்டேட் வங்கியில் எழுத்தர்  பணிக்காக நடத்தப்பட்ட முதனிலை தேர்வின் முடிவுகளில் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான கட் ஆஃப் மதிப்பெண் எஸ்.சி., எஸ்.டி., பிரிவை விட குறைவாக கணக்கிடப்பட்டு இருப்பது  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும்  தெரிவித்தார். மேலும் 10 சதவீத இடஒதுக்கீட்டிற்கு எதிப்பு தெரிவித்து அனைத்து கட்சி சார்பில் வரும் 26 ஆம் தேதி கோவையில் உள்ளபாரத ஸ்டேட் வங்கி தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறும் என அவர்  கூறினார்.

Related Posts