ஹபீஸ் சையத் கட்சியை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவிப்பு

மும்பை தாஜ் ஹோட்டல் தாக்குதல் தீவிரவாதி ஹபீஸ் சயீத்தின் மில்லி முஸ்லிம் லீக் கட்சியை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

அமெரிக்கா : ஏப்ரல்-03

மும்பை தாஜ் ஹோட்டல் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் ஹபீஸ் சயீத். இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள ஹபீஸ் பாகிஸ்தானில் தலைமறைவாகி இருக்கிறார். இந்நிலையில், ஹபீஸ் சையத்தின் மில்லி முஸ்லிம் லீக் கட்சியை வெளிநாடு தீவிரவாதி அமைப்பு பட்டியலில் அமெரிக்கா சேர்த்துள்ளது. முன்னதாக, ஹபீஸ் சையதை சர்வதேச தீவிரவாதியாக அமெரிக்கா அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts