ஹவாய் தீவுகளில் மின்சார வசதி கடுமையாக பாதிக்கப்படும் அபாயம்

ஹவாய் தீவுகளில் வெடித்துள்ள கிளேயா எரிமலையின் மக்மா குழம்புகள், அருகில் உள்ள வெப்ப ஆற்றல் ஆலைக்குள் புகும் நிலை ஏற்பட்டுள்ளதால் மின்சார வசதி கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஹவாய் : மே-23

ஹவாய் தீவில் கிளேயா எரிமலை வெடித்து, மக்மா குழம்புகளை வெளியேற்றி வருகிறது. இந்த நெருப்புக் குழம்புகள் கடல் நீரில் கலக்கும் போது கந்தக டை ஆக்ஸைடு வாயுவையும், குழம்போடு அடர் குளோரிக் அமிலமும் வெளியாகி வருகிறது. இந்நிலையில், ஹவாய் தீவுகளுக்கு தேவையான மின்சாரத்தில் 25 சதவீதத்தை வழங்கும் ஜியோ தெர்மல் பவர் பிளாண்ட் எனப்படும் புவி வெப்ப ஆற்றல் ஆலைக்கு மிக அருகில் நெருப்புக் குழம்புகள் பொங்கி வருகின்றன. இதனால் ஹவாய் தீவின் மின்சார வசதி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

Related Posts