ஹவாய் தீவுகளில் வெடித்துச் சிதறிய எரிமலை – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

ஹவாய் தீவுகளில் வெடித்துச் சிதறிய எரிமலையின் குழம்புகளால் சாலையில் பெரும் பள்ளங்கள் உண்டானதால் அங்குள்ள மக்கள் உடனடியாக வெளியேற அரசு எச்சரித்துள்ளது.

ஹவாய் : மே-14

ஹவாய் தீவில் எரிமலை வெடித்துச் சிதறிலாவா குழம்புகளை வெளியேற்றி வருகிறது. அங்குள்ள கிலாயூ என்ற எரிமலை கடந்த வாரம் முதல் தீப்பிழம்புகளை வெளியேற்றி வருகிறது. காடுகளைக் கடந்து பயணித்து வரும் தீப்பிழம்புகள் குடியிருப்புகளை நோக்கி வந்ததால்பொதுமக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இந்நிலையில்ஹவாய் தீவுகளில் வெடித்த எரிமலையின் மக்மா குழம்புகள் சென்ற பாதையின் இரண்டு இடங்களில் மிகப் பெரிய அளவில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த பள்ளங்கள் வழியாக மீண்டும் லாவா குழம்புகள் வெளிவரலாம் என்று அஞ்சப்படுகிறது.

இதைத் தொடர்ந்து அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள மக்களையும் வெளியேறுமாறு மாகாண நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

Related Posts