ஹாக்கி இந்தியா அமைப்பின் புதிய தலைவராக ரஜிந்தர்சிங் நியமனம்

ஹாக்கி இந்தியா அமைப்பின் புதிய தலைவராக முன்னாள் வீரரும், சீனியர் துணைத்தலைவருமான ரஜிந்தர்சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

டெல்லி : மே-20

ஹாக்கி இந்தியா அமைப்பு கடந்த 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் தலைவராக மரியம்மா கோஷி, கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இருந்து வந்தார். அவர் அந்த பதவியில் இருந்து சமீபத்தில் பதவி விலகினார்.  இதையடுத்து, ஹாக்கி இந்தியா அமைப்பின் புதிய தலைவராக இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் வீரரும், சீனியர் துணைத்தலைவருமான ரஜிந்தர்சிங் நியமிக்கப்பட்டார். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த அவர் இந்திய ஆக்கி அணியின் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். ரஜிந்தர்சிங் துரோனாச்சாரியா விருது, தயான் சந்த் விருது, மகாராஜா ரஞ்சித் சிங் விருது ஆகிய விருதுகளை வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts