ஹெச்.ராஜாவுக்கு எதிராக போஸ்டர்கள்

கடலூர் அருகே, விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொள்ள செல்லும் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவுக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த அரியநாச்சி கிராமத்தில் 80 ஆண்டு பழமையான மாரியம்மன் கோயில் உள்ளது. சேதமடைந்த அந்த கோவிலுக்குத் திருப்பணி செய்வது தொடர்பாக இரு தரப்பினர் இடையே பிரச்னை நிலவி வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் அரியநாச்சி கிராமத்தில் நடைபெற இருக்கும் விநாயகர் சதுர்த்தி விழாவில் ஹெச்.ராஜா பங்கேற்க இருந்தார். அவரை வரவேற்று பா.ஜ.க.வினர் போஸ்டர்கள் ஒட்டினர். இந்நிலையில், ஹெச்.ராஜாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக மற்றும் திமுகவினர் இணைந்து போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். கோவில் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் ஹெச்.ராஜாவின் வருகை தேவையற்ற பிரச்னையை உண்டாக்கும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்

Related Posts