ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அரசு அனுமதித்தால் போராட்டம் தீவிரம் அடையும்

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அரசு அனுமதி வழங்கினால் போராட்டம் தீவிர அடையும் என்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு எச்சரித்துள்ளார்.

விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய கோரியும் ஹைட்ரோகார்பன்,  மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களை எதிர்த்தும் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கும்பகோணம் காந்தி பூங்கா  அருகில்கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு,  தங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றத் தவறினால் சென்னையில் கடலில் இறங்கி போராட்டம் நடத்துவோம் எனஎச்சரித்தார்.  மேலும் மரபணு மாற்றப்பட்ட விதைகளை அரசு அனுமதிக்கக் கூடாது  எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

Related Posts