ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு நிறுத்த வேண்டும்: திருச்சி சிவா வலியுறுத்தல்

இது தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய அவர், தமிழகத்தில் 23 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைப்பதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதாகவும், . 2 ஆயிரம் அடியில் துளையிட்டு ஹைட்ரோ கார்பன் எடுப்பதால் சுற்றுச்சூழலுக்கும் மட்டுமல்ல, மனித உயிருக்கும் கேடு விளைவிக்கும் என்றும் கூறினார். தமிழகத்தில் மழை இல்லாததால் கடும் வறட்சி நிலவுகிறது என்றும்  காவிரியில் தண்ணீர் இல்லாததால்  நிலத்தடி நீர் வற்றிவிட்ட நிலையில்  வறண்ட நிலத்தில் ஹைட்ரோ கார்பன் எடுத்தால் நிலைமை இன்னும் மோசமாகும் என்று  அவர் தெரிவித்தார். மேலும் நாடு எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவு பெற வேண்டும் என்பதற்காக உயிர்நாடியான விவசாயத்தை அழிக்க வேண்டாம் என அவர்  வேண்டுகோள் விடுத்தார்.

. மேலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை பாலைவனம் போன்ற இடங்களில் செயல்படுத்துங்கள் என திருச்சி சிவா வலியுறுத்தினார்.

இதனிடையே காவேரி படுக்கையில் செயல்படுத்த உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறுத்தக்கோரி திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டிஸ் அளித்துள்ளார்.

Related Posts