அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேரத்தில் லாபமடைந்தது யார்? பிரதமர் மோடி


உத்தரகாண்ட் தலைநகர் டேராடூனில் நடந்த பிரச்சார பொதுக் கூட்டத்தில பங்கேற்ற பிரதமர் மோடி, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேர முறைகேட்டில் தொடர்புடைய இடைத்தரகர்களை துபாயில் இருந்து மத்திய அரசு நாடு கடத்தி கொண்டு வந்துள்ளதாகக் கூறினார்.

இடைத்தரகர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். ஹெலிகாப்டர் பேர முறைகேட்டில் லஞ்சம் பெற்றதாக காங்கிரஸ் மூத்தத் தலைவர் அகமது படேல் மற்றும் ஒரு குடும்பத்தின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

அகமது படேல் யார்? அவர் எந்த குடும்பத்துக்கு நெருக்கமானவர் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும் என்றும், இதில் ஆதாயம் அடைந்த குடும்பத்தினர் யார் என்பது தெரிய வேண்டும் என்றும் மோடி குறிப்பிட்டார்

Related Posts