அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் 10 பேருக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன்


மருத்துவக்குழு அமைத்தால் மட்டுமே தங்கள் மருத்துவர்கள் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் விசாரணைக்கு ஆஜராவார்கள் என்று, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ஆறுமுகசாமி ஆணையம் அப்பல்லோ மருத்துவர்களை விசாரிக்க தடையில்லை என உத்தரவிட்டனர்.

இதைத் தொடர்ந்து 10 மற்றும் 11ம் தேதிகளில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் 10 பேருக்கும், டெக்னீசியன் ஒருவருக்கும் ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

Related Posts