இந்தியா ஏவுகணை, செயற்கைகோளை சுட்டு வீழ்த்தியதால் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஆபத்து என நாசா கூறியுள்ளதுவிண்வெளியில், 300 கி.மீ. தொலைவில் உள்ள செயற்கைகோள் ஒன்றை ஏவுகணையால் சுட்டு வீழ்த்தும் சோதனையை இந்தியா கடந்த வாரம் வெற்றிகரமாக செய்தது. இதை பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்தார்.


இந்நிலையில், இந்த சோதனை ஒரு பயங்கரமான விஷயம் என்று அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘நாசா’ முதல்முறையாக கருத்து கூறியுள்ளது.
செயற்கைகோள் தகர்ப்பு ஏவுகணை சோதனையை இந்தியா செய்துள்ளதால், 400 குப்பை துண்டுகள் உருவாகி உள்ளதாகவும் இதனால் சர்வதேச விண்வெளி நிலையத்தும் அங்குள்ள விண்வெளி வீர்ர்களுக்கும் அச்சுறுத்தலாக அமைபும் என்று நாசா கூறியுள்ளது. இந்தியாவை தொடர்ந்து மற்ற நாடுகளும் இதுபோன்ற செயல்களிலும் ஈடுபடக்கூடும் எனவும் நாசா குறிப்பிட்டுள்ளது.

Related Posts