உடல் நலக்குறைவு காரணமாக குமரி அனந்தன் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்


தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், காந்தி பேரவை அமைப்பின் தலைவருமான குமரி அனந்தன் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து குமரி அனந்தன் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். உடல்நலம் தேறும் வரையில் பிரசாரத்தில் பங்கேற்க வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். ‘உடல்நலம் தேறியதும் மீண்டும் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவேன்’ என குமரி அனந்தன் தெரிவித்தார்.

==

4) மகள் திருமண ஏற்பாட்டிற்காக 6 மாதம் பரோல் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் நளினி மனு தாக்கல் செய்துள்ளார்.

ராஜிவ் கொலை வழக்கில் கடந்த 27 ஆண்டுகளாக வேலூர் சிறையில் நளினி அடைக்கப்பட்டுள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பரோல் கேட்டு கொடுக்கப்பட்ட மனுவை வேலூர் சிறை நிர்வாகம் பரிசீலிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

2000 ஆம் ஆண்டுக்கு பிறகு 3700 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

லண்டனில் வசிக்கும் தனது மகள் ஹரிதாவுக்கு திருமண ஏற்பாடுகள் செய்ய 6 மாதம் பரோல் வழங்க வேண்டும் என்றும், நேரில் வாதாட அனுமதிக்க வேண்டும் என்றும் நளினி கோரிக்கை வைத்துள்ளார். அந்த மனு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது.

Related Posts