உலக வங்கியின் புதிய தலைவர் டேவிட் மால்பாஸ்


,

உலக நாடுகளில் வறுமையை குறைக்கவும், பொருளாதார முன்னேற்றத்துக்காகவும் செயல்பட்டு வரும் உலக வங்கியில் இந்தியா உள்பட 189 நாடுகள் அங்கத்தினர்களாக உள்ளன. உலக வங்கியின் தலைமையகம் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ளது. இந்த வங்கியின் தலைவராக இருக்கும் ஜிம் யாங் கிம், கடந்த ஜனவரி மாதம் பதவியில் இருந்து விலகினார். 

இதையடுத்து, உலக வங்கியின் தலைவர் பொறுப்புக்கு முன்னிறுத்தும் நபரை தேர்வு செய்வதற்காக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் நிர்வாகம் தீவிரம் காட்டியது. இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும் பெப்ஸி நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ-வான இந்திராநூயி, இவாங்கா டிரம்ப் ஆகியோர்  பெயரும் இந்த பதவிக்கு அமெரிக்கா சார்பில் முன்மொழியப்படலாம் என தகவல் வெளியானது. 

இந்த நிலையில்,  அமெரிக்க கருவூலத்துறை அதிகாரி மல்பாஸ் என்பவரை உலக வங்கியின் தலைவராக நியமிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் பரிந்துரை செய்ததையடுத்து புதிய தலைவராக டேவிட் மால்பாஸ் தேர்வாகி உள்ளார்.  உலக வங்கி தலைவராகும் 73-வது அமெரிக்கர் ஆவார். வரும் 9-ம் தேதியன்று அதிகாரப்பூர்வமாக டேவிட் மால்பாஸ் பதவி ஏற்றுக்கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Posts