கூடலூரில் பட்டபகலில் வாக்காளருக்கு அதிமுகவினர் பரிசு பொருட்கள் வழங்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்


நீலகிரி மாவட்டம் கூடலூரில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம்  இன்று பிரச்சாரம் செய்கிறார். அவரது வருகையையொட்டி ஆட்களை திரட்ட லாரி லாரியாக சில்வர் குடங்கள் உள்ளிட்ட பரிசு பொருட்களை பொது இடங்களில் வைத்து அதிமுகவினர் வாரி வழங்கினர்.

கூடலூர் சின்ன பள்ளி வாசல் தெருவில் வைத்து வழங்கப்பட்ட பரிசுப் பொருட்களை பொதுமக்கள் முண்டியடித்துக்கொண்டு வாங்கிச் சென்றனர். ஆளுங்கட்சியினரின் இந்த தேர்தல் விதிமீறல்களை தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளாத்து குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Related Posts