கொல்கத்தாக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி


சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், முன்னாள் சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான 23-வது லீக் போட்டி நேற்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 108 ரன்களை எடுத்தது.

இதனையடுத்து  109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 17.2 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 111 ரன்கள் எடுத்த்து. இதன் மூலம் சென்னை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது

Related Posts