சாய்வாலா இப்போது சவுக்கிதார் என்று பிரசாரத்தை மாற்றிக்கொண்டு பிரதமர் மோடி மக்களை முட்டாளாக்கி வருகிறார்; மம்தா பானர்ஜி விமர்சனம்!


மேற்கு வங்கம் கொல்கத்தாவிலிருந்து 683 கி.மீ. தொலைவில் நேபாளம், பூட்டான் அருகே உள்ள கூச் பெஹர் என்ற இடத்தில் நேற்று பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அதில் கலந்து கொண்டு பேசிய மாநில முதலமைச்சரும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி,

வங்கதேசத்துடனான அறுபது ஆண்டு பிரச்சினைக்கு 2015-ல் திரிணாமூல் காங்கிரஸ் தீர்வு கண்டதாக தெரிவித்தார். சட்டப்பூர்வ குடிமக்களானவர்களை எல்லாம் அகதிகளாக மாற்றுவதற்கு பாஜக ஒரு குடிமக்கள் திருத்த மசோதாவைக் கொண்டு வந்துள்ளதாக அவர் கூறினார்.

குடியுரிமை சட்டம் என்பது இந்த நாட்டின் சட்டப்பூர்வ குடிமக்களை அகதிகளாக மாற்றுவதற்கான மற்றொரு சதி. எனவும் பாஜகவின் இந்த சதித் திட்டம் குறித்து நாம் கவனமாக இருக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

2014 மக்களவைத் தேர்தலில் வெளிநாட்டில் இருந்து கருப்பு பணத்தை மீட்டு வங்கி கணக்கில் 15 லட்சம் ரூபாய் செலுத்தப்படும் என  அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தோல்வியடைந்த சாய்வாலா இப்போது சவுக்கிதார் என்று பிரசாரத்தை மாற்றிக்கொண்டு மக்களை முட்டாளாக்கி வருகிறார என மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

Related Posts