சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க திமுக ஆட்சியில் மேம்பாலங்கள் கட்டப்பட்டதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்


தென்சென்னை தொகுதியில் தி.மு.. வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு திமுக தலைவர் மு..ஸ்டாலின் வாக்குசேகரித்தார் வருகிறார். அப்போது பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர்; வாழ்நாள் முழுவதும் மொழிக்காக, இனத்திற்காக, நாட்டிற்காக பாடுபட்ட ஒரே தலைவர் கலைஞர் கருணாநிதி என்று தெரிவித்தார். தென் சென்னை மக்களவை தொகுதியில் தான் அண்ணா, முரசொலி மாறன் ஆகியோர் நின்று வென்று நாடாளுமன்றத்துக்கு சென்றுள்ளனர். பெருமைமிகு தென்சென்னை தொகுதியில் தமிழச்சி தங்கபாண்டியன் போட்டியிடும் வாய்ப்பை பெற்றுள்ளார் என்று கூறினார்.

வரும் தேர்தலில் 40 தொகுதிகளில் திமுக நிச்சயம் வெற்றி பெரும் திமுக தலைவர் மு..ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரிப்பதன் மூலம் இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை கொண்டுவர முடியும் என்று அவர் கூறினார்.


மேலும் தான் மேயராக இருந்தபோது 10 மாதங்களில் 9 பாலங்களை கட்டி முடித்ததாக மு..ஸ்டாலின் பெருமிதத்தோடு தெரிவித்தார். போக்குவரத்து நெரிசலை குறைக்க திமுக ஆட்சியில் தான் சென்னையில் மேம்பாலங்கள் கட்டப்பட்டதாக அவர் கூறினார்.

Related Posts