ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த பெருமை அதிமுக ஆட்சியை சாரும்:முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி


தேனி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத்தை ஆதரித்து மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் முதலமைச்சர் பழனிசாமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திறந்த வேனில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்த்த சட்ட போராட்டம் நடத்தியது அதிமுக அரசு தான் என்றும், விரைவில் 152 அடியாக உயர்த்தப்படும் எனவும் உறுதியளித்தார்.

அத்துடன் முல்லை பெரியாறு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள போதும், கேரள அரசு தொடர்ந்து இடையூறு செய்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

மேலும் ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த பெருமை அதிமுக ஆட்சியை சாரும் என்று கூறிய முதலமைச்சர் பழனிசாமி ஜல்லிக்கட்டுக்கு நினைவு சின்னம் அமைக்கப்படுவதுடன், வீரன் காளையை அடக்குவது போன்று சிலை நிறுவப்படும் எனவும் கூறினார்.

Related Posts