ஜாலியன் வாலாபாக் படுகொலை:பிரிட்டன் அரசு வருத்தம்


1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசிலுள்ள ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் சுதந்திரப் போராட்டத்திற்காக கூடிய மக்கள் மீது ஜெனரல் டயர் தலைமையிலான பிரிட்டிஷ் படைகள் நடத்திய கொடூர தாக்குதலில் 400 பேர் கொல்லப்பட்டதுடன், ஆயிரம் பேர் படுகாயமடைந்தனர்.

அந்த சம்பவத்தின் 100வது ஆண்டு நினைவு தினம் வரும் சனிக்கிழமை அனுசரிக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக பேசிய பிரதமர் தெரசா மே, ஜாலியன் வாலாபாக் படுகொலைக்காக ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தார்.

பிரிட்டிஷ் இந்திய வரலாற்றில் இது வெட்கப்பட வேண்டிய துக்கரமான வடு என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related Posts