ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது

Want create site? Find Free WordPress Themes and plugins.


ஜெயலலிதா மரணம் தொடர்பாக எழுந்த சந்தேகங்கள் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. ஜெயலலிதாவின் உதவியாளர், உறவினர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள், சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் என பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தப்பட்டு, அவர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சாட்சியம் அளித்தவர்களிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை நடத்தி, அதன் விவரங்களும் பதிவு செய்யப்பட்டன.  இதற்கிடையே, நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும், 21 மருத்துவர்கள் அடங்கிய குழு மூலமாக விசாரணை நடத்த உத்தரவிடக் கோரியும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் இரண்டு மனுக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களைநீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. அப்பல்லோ மற்றும் ஆணையத்தின் தரப்பு  வாதங்கள் கடந்த மாதம் முடிவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், அப்பல்லோ தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளித்த நீதிபதிகள்,  ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு தடை விதிக்க  மறுத்தனர். மேலும், 90 சதவீத விசாரணை முடிவடைந்து விட்டதால், இனி 21மருத்துவர் கொண்ட குழுவை அமைத்து விசாரிக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts