டெல்லிக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணி வெற்றிபெற்றது


முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி, 9 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் குவித்தது. டெல்லி தரப்பில், கிறிஸ் மோரிஸ் அதிகப் பட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

167 ரன்கள் எடுத்தல் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி வீரர்களுக்கு தொடக்கமே, அதிர்ச்சியாக அமைந்தது. பிரித்வி ஷா ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆனார்.

பஞ்சாப் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் டெல்லி வீரர்கள் திணறினர். அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். பஞ்சாப் வீரர் சாம் கரண் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி ஆசத்தினார்.

டெல்லி அணி, 19.2 ஓவரில் 152 ரன்கள் எடுத்திருந்தபோது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று, நடப்பு சீசனில் 3-வது வெற்றியைப் பதிவு செய்தது.

Related Posts