தமிழகம் வரும் பா.ஜ.க. தலைவர் அமித்ஷா அக்கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்

BJP Leader Amit Shah

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் 18-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளதையடுத்து அகில இந்திய தலைவர்கள் தமிழகத்துக்கு வர தொடங்கி உள்ளனர்.

இன்று காலை 9.30 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்படும் பாஜக  தலைவர் அமித்ஷா தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி பா... வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனை ஆதரித்து  பேசுகிறார்.

பின்னர் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி பா... வேட்பாளர் எச்.ராஜாவை ஆதரித்து வாக்கு சேகரிக்கும் அவர், பொதுக்கூட்டத்தை முடித்துக்கொண்டு விமானம் மூலம் கோவை வருகிறார்.

கோவையில் நடக்க உள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு கோவை நாடாளுமன்ற தொகுதி பா... வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

பிரசாரத்தை முடித்துக்கொள்ளும் அவர், அங்கிருந்து கார் மூலம் கோவை விமான நிலையம் வந்து பெங்களூரு புறப்பட்டு செல்கிறார். 

Related Posts