திருமலையில் அன்னமய்யா ஆராதனை விழா சிறப்பாக நடைபெற்றது


திருமலையில் உள்ள நாராயண கிரி தோட்டத்தில்
தாளப்பாக்கம்  அன்னம்மாச்சாரியாரின் 516 வது ஆராதனை விழா  மிக சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக ஸ்ரீதேவி பூதேவி சமேத  மலையப்ப சுவாமியை தோட்டத்தில் எழுந்தருளச் செய்தனர். பெருமாள் தாயார்களின் ஊஞ்சல் சேவை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அன்ன மாச்சாரியார் கீர்த்தனைகளை பாடி கலைஞர்கள் இசை அஞ்சலி செலுத்தினர். அஹோபில மட ஜீயர் அய்யங்கார் ஆராதனையை முன்னின்று நடத்தினார்.

Related Posts