தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் நல்லகண்ணு தெரிவித்துள்ளார்


விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் திமுக கூட்டணி கட்சியின் விடுதலை சிறுத்தை கட்சி வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் நல்லக்கண்ணு, பிரச்சாரம் மேற்கொண்டார். இதில் திமுக, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தை கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியை சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த  அவர், தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுவதாக தெரிவித்தார். பொள்ளாச்சி விவகாரத்தில் சம்பந்தபட்ட நபரிடம் சிபிஐ விசாரணை மேற்கொள்ளாமல் தேவையில்லாத சிலருக்கு நெருக்கடி உண்டாக்குவதாக அவர் கூறினார்.

Related Posts