நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தலை தடுக்கும் வகையில் மத்திய அரசுடன் இணைந்து செயல்படுகிறோம்; அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்


ஈரோடு நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் வெங்கு மணிமாறனுக்கு ஆதரவாக, ஈரோடு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அலுவலகத்தில், அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் ஆகியோர் ஆதரவு திரட்டினர்.

பேரமைப்பு சார்பில், வணிகர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகள் அடங்கிய மனு அமைச்சரிடம் அளிக்கப்பட்டது.

கோரிக்கை மனுவை பெற்ற பின் பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கோரிக்கைகள், அரசு மூலம் பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், நாட்டின் பாதுகாப்பு, அச்சுறுத்தலை தடுக்கும் வகையில், மத்திய அரசுடன் இணைந்து செயல்படுகிறோம். என்று அவர் கூறினார்.

இதில் அமைச்சர் கருப்பணன், பேரமைப்பு மாநில இணை செயலாளர் சிவநேசன், மாவட்ட நிர்வாகிகள் சண்முகவேல், தேவராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.

Related Posts