நூறு சதவிகிதம் வாக்களிப்பது தொடர்பாக பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் விழிப்புணர்வு


கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தின் மேல் வாக்களிப்பதன் அவசியத்தை பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையிலும் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் ராட்சத பலூன் பறக்கவிடப்பட்டது. முன்னதாக ராட்சத பலூனை பறக்க விட்ட கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி வாக்களிப்பது நமது கடமை என்ற வாசகம் பொறித்த ஸ்டிக்கர் ஒன்றையும் அறிமுகப்படுத்தி அந்த ஸ்டிக்கரை செல்போன்களின் பின்புறமாக ஒட்டி அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இதேபோல் தனியார் ஜவுளி நிறுவனம் ஒன்றின் சார்பில் வாடிக்கையாளர்களுக்காக வழங்கப்படும் பைகளில் நூறு சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என அச்சிடப்பட்டிருந்த பைகளையும் ஆட்சியர் ராசாமணி வெளியிட்டார்.

Related Posts