பண பலத்தைத் தடுக்க தீவிரம் காட்ட வேண்டு தமிழக அதிகாரிகள், அலுவலர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு!


இந்திய தேர்தல் ஆணையர்கள் அசோக் லவாசா, சுஷீல் சந்திரா, தேர்தல் ஆணைய முதுநிலை துணை ஆணையர் உமேஷ் சின்ஹா, செலவின கண்காணிப்புப் பிரிவின் தலைவர் திலீப் சர்மா ஆகியோர் மூன்று நாள்கள் பயணமாக சென்னை வந்தனர். தமிழகத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, அரசுத் துறை உயரதிகாரிகள், மாவட்டத் தேர்தல் அதிகாரிகள், காவல் துறை உயரதிகாரிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர். பின்னர் அவர்கள் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய இந்திய தேர்தல் ஆணையர் அசோக் லவாசா, தமிழகத்தில் சுதந்திரமான, நியாயமான தேர்தலை நடத்துவதற்கான உகந்த சூழலை உருவாக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்தார்

தமிழகத்திலுள்ள வாக்காளர்கள் எந்தவித அச்ச உணர்வும், அழுத்தமும் இல்லாமல் எவ்வித கவர்ச்சிக்கும் மயங்காமல் தங்களது வாக்குகளைச் செலுத்துவதை மாநிலத்தின் அனைத்துப் பிரிவு தேர்தல் பணியாற்றும் ஊழியர்களும், அதிகாரிகளும் உறுதி செய்திட வேண்டும் என அவர் கூறினார்.

பண பலம் தொடர்பாக ஏராளமான தகவல்கள் தேர்தல் ஆணையத்துக்கு வந்து கொண்டே இருப்பதாக கூறிய அவர், பண பலத்தைத் தடுக்க மிகத் தீவிரமான, வெளிப்படையான அணுகுமுறைகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றார். மதுபாட்டில்கள், இலவச பரிசுப் பொருள்கள், ரொக்கப் பணம் ஆகியவற்றின் புழக்கத்தை கருத்தில் கொண்டு ஏற்கெனவே பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர்,
ஜி.பி.எஸ்., கருவி பொருத்தப்பட்டுள்ள பறக்கும் படை வாகனங்கள், நிலை கண்காணிப்புக் குழுக்கள், எல்லை சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு போன்ற நடவடிக்கைகளில் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது என்று கூறினார்.

Related Posts