பிரதமர் மோடியும் அவரது தலைமையிலான மத்திய அரசும் காலாவதியாகிவிட்டதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சாடி உள்ளார்நாடாளுமன்ற தேர்தலையொட்டி, மேற்குவங்கத்தில் பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தின்போது பேசிய பிரதமர் மோடி, மம்தாவின் ஆட்சி மாநிலத்தின் வளர்ச்சியை தடுக்கும் ஸ்பீட் பிரேக்கர் என தெரிவித்தார்.

இதற்கு பதிலடி தரும் விதமாக பிரசாரத்தின்போது பேசிய மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி, பிரதமர் மோடியும், அவரது ஆட்சியும் காலாவதியாகிவிட்டதாக தெரிவித்தார். தனது தலைமையிலான மாநில அரசு, ஏழைகளின் வளர்ச்சியை மேம்படுத்தவில்லை என பிரதமர் மோடி குற்றம் சாட்டியதற்கு பதிலளித்த மம்தா, கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு செய்தது என்ன? கேள்வி எழுப்பினார்.  தினமும் பொய் பேசும் பிரதமராக மோடி திகழ்கிறார் என்று அவர் கூறினார்.

Related Posts