புதுச்சேரி அரசை செயல்படவிடாமல் பிரதமர் மோடியும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும் தடுப்பதாக முதலமைச்சர் நாராயணசாமி விமர்சித்துள்ளார்


புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தின் அறிமுக கூட்டம், மூலக்குளம் பகுதியில் நடைபெற்றது.சட்டமன்ற உறுப்பினர் எம்.என்.ஆர்.பாலன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முதல்வர் நாராயணசாமி,மாநில தலைவர் நமச்சிவாயம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் நாராயணசாமி,  ராகுல் காந்தி பிரதமராக பொறுப்பேற்றவுடன், புதுச்சேரியில் ஆளுனரால் நியமிக்கப்பட்ட 3 நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் நீக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார், மேலும் தனது அரசை செயல்படாமல் முடக்குவதற்கு, பிரதமர் மோடிக்கும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் உதவியவர் எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி எனவும் அவர் தான் தமது கை கால்களை கட்டிப்போட அவர்களுக்கு உதவினார் எனவும் நாராயணசாமி கடுமையாக விமர்சித்தார்.

Related Posts