பொதுப்பட்டியல் கல்வியை மத்திய பட்டியலுக்கு மாற்ற பாஜக முயற்சி: துணைவேந்தர்கள் குற்றச்சாட்டு

பொதுப்பட்டியலில் உள்ள கல்வியை மத்திய பட்டியலுக்கு மாற்ற பாஜக அரசு முயற்சி செய்வதாக பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த முன்னாள் துணைவேந்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ராஜேந்திரன் சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சாதிக் எழுத்தாளர் மற்றும் பேராசிரியர் மார்க்ஸ் உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் வசந்தி தேவி அனைத்து துறைகளிலும் மத்திய அரசு தனது அதிகாரத்தை செலுத்தி வருவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய தமிழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ராஜேந்திரன், பொதுப் பட்டியலில் இருக்கும் கல்வியை மத்திய பட்டியலுக்கு மாற்ற பாஜக அரசு முயற்சி செய்ததாகவும், மேலும் மாநில அரசின் அதிகாரங்கள் அனைத்தையும் பறிப்பதற்கு பாஜக முயற்சி செய்ததாகவும் குற்றஞ்சாட்டினார்,

Related Posts