முந்தைய கால கட்டத்தில் ஆட்சியில் செய்த சாதனைகளுக்கு நிகரான சாதனைகளை தேர்தலில் வெற்றி பெற்றால் திமுக நிகழ்த்திக் காட்டும்: மு.க.ஸ்டாலின்


திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மக்களவை மற்றும் தமிழக சட்டமன்ற இடைத் தேர்தலுக்காக தொகுதிகள் தோறும் சென்று ஆதரவு திரட்டி வருகிறார். நீலகிரி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற்றாக வேண்டும் என்றார். தேர்தலுக்காக மட்டுமே மக்களை நாடி வரும் இயக்கம் திமுக அல்ல என்று அவர் குறிப்பிட்டார்.

தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றி அமைக்கும் தேர்தல் என்பதால் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்ற தமது பேச்சுக்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவிப்பதை சுட்டிக்காட்டிய ஸ்டாலின், முதலமைச்சர் என்ற முறையிலேயே ஜெயலலிதா குறித்து தாம் பேசுவதாக கூறினார்.
 

ஆட்சியில் இருந்த போது திமுக செய்த திட்டங்களை பட்டியலிட்ட அவர், இதே போல தேர்தலில் வெற்றி பெற்றால் திமுக மேலும் பல திட்டங்களை நிறைவேற்றுமென உறுதியளித்தார்.

Related Posts