மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட்ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை அணியை தோற்கடித்தது


ஐபிஎல் தொடரின் 15-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் எம்.எஸ்.டோனி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டி காக், ரோகித் சர்மா இறங்கினர். சென்னை அணியின் அசத்தல் பந்து வீச்சில் மும்பை வீரர்கள் ரன்கள் குவிக்க திணறினர்

இறுதியில், மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 170 ரன்களை எடுத்தது.

171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணி, 20 ஒவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்தது. இறுதியில் வெற்றி முகம் கொண்ட சென்னை அணியை  37 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வீழ்த்தியது.

Related Posts